1 Year NEET Biology Tamil - Vari Medical Academy

Apply Now

    Contact Us

    • +917339093846
    • variacademy@gmail.com
    • Sri Guru Institute of Technology Campus, Saravanampatti, Coimbatore - 641035.
    crash-course

    8 week

    8Lessons
    17Enrolled

    அறிமுகம் :

    • தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) உயிரியல் தாள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது- தாவரவியல் மற்றும் விலங்கியல். நீட்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதில் தாவரவியல் மற்றும் விலங்கியல் இரண்டும் சமமாக முக்கியம்.
    • தாவரவியல் என்பது தாவரங்களின் அமைப்பு, பண்புகள் மற்றும் உயிர்வேதியியல் செயல்முறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதோடு தொடர்புடைய உயிரியலின் ஒரு கிளை ஆகும்.
    • தாவரவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற, அடிப்படைக்கருத்துகள் மற்றும் விதிமுறைகளைப் புரிந்து கொண்டால் எளிதில் அதிகம் மதிப்பெண் பெற முடியும்
    அத்தியாயம் தலைப்பு
    அலகு 1 உயிர் உலகின் பல்வகைமை பல்லுயிர்த்தன்மை;
    உயிர் வாழ்வன என்றால் என்ன ? உயிரிய பல்வகைமை வகைப்பாட்டிற்கான தேவை; உயிரினகளின் மூன்று பேருலகம் வகைப்பாட்டியல் மற்றும் தொகுப்பமைவியல்: சிற்றினக்கோட்பாடு மற்றும் வகைப்பாட்டு படிநிலைகள் இரு பெயரிடு முறை வகைப்பாட்டியலுக்கு உதவும் கருவிகள்- அருங்காட்சியகம், உயிரியல் பூங்காக்கள், தாவரப்பதனங்கள், தாவர தோட்டங்கள்.தாவர வகைப்பாடு
    ஐந்துலக வகைப்பாடு: மொனிரா-புரோடிஸ்டா மற்றும் பூஞ்சை-பண்புகள் மற்றும் வகைப்பாடு ( பெரும் குழு வரை); லைக்கன்கள், வைரஸ்கள் மற்றும் வைராய்டுகள்.உயிரியல் வகைப்பாடு
    சிறப்பு பண்புகள் மற்றும் நாவரப்பெரும் பிரிவு வகைப்பாடு பாசிகள், பிரியோபைட்டுகள், டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள்(மூன்று முதல் ஐந்து முக்கிய அம்சங்கள் மற்றும் வேறுபடுத்தி அறியும் பண்புகள், ஒவ்வொரு வகையிலும் குறைந்தது இரண்டு உதாரணங்கள். ஆஞ்சியோஸ்பெர்ம்கள் வகுப்பு வரையிலான வகைப்பாடு முக்கிய பண்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்
    2 .விலங்குகள் மற்றும் தாவரங்களின் அமைப்பு முறை: 2.1 தாவர புற அமைப்பியல்
    புறத்தோற்றவியல் மற்றும் மாற்றமைப்புகள், திசுக்கள் உள்ளமைப்பு மற்றும் பூக்கும் தாவரங்களின் பல்வேறு பாகங்களின் வகை, ரசம் வகை, மலர்,கனி செயல் முறைகள்). செயல்பாடுகள் . வேர், தண்டு, இலை, மஞ்சரி, -சைம் மற்றும் விதை (செய்முறை பாடத்திட்ட அடிப்படையிலான உரிய
    அலகு 3 :செல் அமைப்பு மற்றும் செயல்கள்: 3.1 செல் உயிரியல்
    செல் கோட்பாடு மற்றும் செல் உயிரியின் அடிப்படை அலகு உட்கருவற்ற மற்றும் உட்கரு கொண்ட செல்லின் அமைப்பு ; தாவர செல் மற்றும் விலங்கு செல்; செல் சூழ்படலம், செல்சவ்வு, செல் சுவர்;செல் நுண் உள்ளுறுப்புகள்- அமைப்பு மற்றும் செயல்கள்; அகபிளாச சவ்வுகள் தொகுதி -அகப்பிளாச வலைப்பின்னல், கால்கை உறுப்புகள, லைசோசோம்கள், நுண் குமிழி மைட்டாகாண்டிரியா, ரிபோசோம்கள், பிளாஸ்டிடுகள், நுண்ணிய உறுப்புகள்; செல் சட்டகம், குற்றிழை, நீளிழை, செண்டிரியோல்கள் (நுண்ணமைப்பு மற்றும் செயல்கள்); உட்கரு – உட்கரு சவ்வு, குரோமாட்டின், உட்கரு மணி.3.2 உயிர்மூலக்கூறுகள்
    உயிர்வாழ் செல்களின் வேதிக்கூறுகள்; உயிர்மூலக்கூறுகள்-புரதங்கள், மாவுப்பொருள்கள், லிப்பிடுகள், உட்கரு அமிலங்கள்ஆகியவற்றின் அமைப்பு மற்றும் செயல்;நொதிகள்-வகைகள், பண்புகள்,நொதிசெயல்பாடு.3.3 செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு
    செல் பகுப்பு:செல்சுழற்சி,நேரடி பகுப்பு,குன்றல் பிரிவு மற்றும் அவற்றின் முக்கியத்துவம்
    அலகு 4 : தாவர உடலியங்கியல்: 4.1 தாவரங்களில் நீர் கடத்துதல்
    தாவரகளில் கடத்து முறைகள், நீர், வாயுக்கள் மற்றும் ஊட்டங்களின் நகர்வு, செல்களிடையேயான நகர்வு – விரவுதல், எளிதாக்கியவிரவுதல், செயலில் கடத்துதல், நீண்ட தூரக்கடத்துதல்; தாவர் -நீர் தொடர்புகள்- உள் ஈர்த்தல், நீர் திறன், சவ்வூடு பரவல், பிளாஸ்மா சிதைவு, நீண்ட தூரக்கடத்தல்-உரிஞ்சுதல், அபொப்லாஸ்ட் சிம்ப்லாஸ்ட் நீராவிப்போக்கு இழுவிசை,வேர் அழுத்தம்மற்றும் நீர் வடித்தல்நீராவிபோக்கு – இலைத்துளை திறப்பு மற்றும் மூடல், கனிம ஊட்டம் உரிஞ்சுதல் மற்றும் இடப்பெயர்ச்சி- உணவு கடத்துதல், புளோயம் கடத்துதல், மொத்த ஓட்டக் கோட்பாடு; வாயுக்களின் பரவல்(சுருக்கமாக குறிப்பிடல்)4.2கனிம ஊட்டம்
    கனிம ஊட்டம் அத்தியாவசிய தாதுக்கள், பேருட்ட மற்றும் நுண் ஊட்ட மூலங்கள் மற்றும் அவற்றின் பங்கு, குறைபாடு அறிகுறிகள் : கனிம நச்சுதன்மை; கனிம ஊட்டம் குறித் தறியும் ஒரு முறையாக ஹைட்ரோபொனிக்ஸ் பற்றிய அடிப்படை அறிவு நைட்ரஜன் வளர்சிதை மாற்றம் -நைட்ரஜன்சுழற்சி-உயிரிய நைட்ரஜன் நிலை நிறுத்துதல்4.3 ஒளிச்சேர்க்கை;
    ஒளிச்சேர்க்கை; ஒளிச்சேர்க்கை ஒரு சுயசார்ப்பு ஊட்டம் என்பதன் மூலம் ஒளிச்சேர்க்கை நிகழும் பகுதி; ஒளிச்சேர்க்கை ஈடுபடும் நிறமிகள் (அடிப்படை அறிவு) ஒளிச்சேர்க்கை யின் ஒளிவேதிம மற்றும் உயிரியக்கவியல் கட்டங்கள்: சுழல் ஒளி பாஸ்பரிகரணம்.வேதி சவ்வூடு பரவல் கோட்பாடு; சொலி சுவாசம் C3 மற்றும் C4 வழித்தடங்கள்; ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் காரணிகள்,4.4 தாவரங்களில் சுவாசித்தல்
    சுவாசம் : வாயுக்களின் பரிமாற்றம் ;உயிர்செல் சுவாசம் -கிளைகாலிசிஸ், நொதித்தல்(காற்றில்லா சுவாசம்), சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்து சங்கிலி (காற்று சுவாசம்) ஆற்றல் உறவுகள் தோற்றுவிக்கப்பட்ட மூலக்கூறுகளின் எண்ணிக்கை ; ஆம்பிபொலிக் பாதை’; சுவாச ஈவு
    4.5 தாவர வளர்ச்சி மற்றும் ஹார்மோன்கள் தாவரவளர்ச்சியும், படிம வளர்ச்சியும் ; விதை முளைத்தல்; தாவர வளர்ச்சி மற்றும் தாவர வளர்ச்சி வேகம் ஆகியவற்றின் கட்டங்கள் ; வளர்ச்சி நிலைமைகள் வேறுபாட்டைதல்; மாறுபாடடைதல்; மீள் வேறுபாடடைதல்; ஒரு தாவர செல்லில் வளர்ச்சி செயல்முறைகளின் வளர்ச்சி ஊக்கிகள் -ஆக்ஸின், ஜிப்ரெல்லின், சைடோகினின், எத்திலின், அப்சிசிக அமிலம்; விதை உறக்கம்; தட்பப்பதனம்;ஒலிக்காலத்துவ

    12 ம் வகுப்பு உயிரியல் நீட் பாடத்திட்டம்

    அத்தியாயம் தலைப்பு
    அலகு 6 இனப்பெருக்கம் 6.1 உயிரிகளின் இனபெருக்கம் :
    இனபெருக்கம் என்பது இனத்தின் விருத்திக்காக, அனைத்து உயிரிகளில் காணப்படும் ஒரு சிறப்பியல்பு இனப்பெருக்க வகைகள் -பாலில்லர் மற்றும் பால்முறை பாலில்லா இன்ப்பெருக்க வகைகள் -இரு சம பிளவு ஸ்போர் உருவாக்கம் மொட்டுகள், கெம்பியூள், துண்டாக்கம்; தாவரங்களில் தாவரபரவுதல்.6.2 பூத்தாவரங்களின் பால் இனப்பெருக்கம்:
    மலர் அமைப்பு ஆண் மற்றும் பெண் காமிட்டோஃபைட்டுகள்; மகரந்த சேர்க்கை -வகைகள் முகர்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள்;புரகலப்பு சாதனங்கள், மகரந்த பிஸ்டில்உறவு, இரட்டைகருவுறுதல்; கருவுறுதல் பின் நிகழ்வுகள் – எண்டோஸ்பெர்ம் மற்றும் கரு வளர்ச்சி விதை வளர்ச்சி மற்றும் கனி உருவாதல்; சிறப்பு முறைகள் -அபோமிக்சிஸ்,பார்தினோகார்பி, பாலிஎம்பிரொனி விதை மற்றும் கனி உருவாக்கத்தின் முக்கியத்துவம்.
    அலகு 7 : மரபியல் மற்றும் பரிணாமம் : 7.1. மரபு வழி மற்றும் வேறுபாடுகள்:-
    மெண்டலின் பாரம்பரியம்;மெண்டல் கோட்பாடிலிருந்து விலகல் முழுமையற்ற ஒங்குதன்மை, இணைஓங்குதன்மை, பலகூட்டு அவில்கள் மற்றும் இரத்தவகை பாரம்பரியம், பல் திருப்ப உண்மை; பல ஜீன் பாரம்பரியத்தின் அடிப்படை உண்மைகள் ; பாரம்பரியத்தின் குரோமோசோம் கோட்பாடு; குரோமோசோம்கள் மற்றும் ஜீன்கள்; பாலின நிரணயம் -மளிதன், பறவைகள், தேனி, பிணைப்புமற்றும் குறுக்கெதிர் மாற்றம் பால் பிணைப்புபாரம்பரியம் ஹீமோஃபீலியா, நிறக்குருடு;மனிதனில் மெண்டலிய குறைபாடுகள்- தலசீமியா; மனிதனில் குரோமோசோம் குறைபாடுகள்- டவுன் குறைபாடு, டரனரின் குறைபாடு மற்றும் கினைன்ஃபெல்டரின் குறைபாடு.7.2 பாரம்பரியத்தின் மூலக்கூறு அடிப்படை பாரம்பரிய பொருளுக்கான தேடல், மற்றும் டி.என்.ஏ பாரம்பரியத்திற்கான பொருள்; டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ வின் அமைப்பு: டி.என்.ஏ பொதித்தல்; டி.என்.ஏ இரடிப்பு மையக்கோட்பாடு; படியெடுத்தல் மரபிய குறியீடுப் படி பெயர்த்தல்; மரபணு வெளிப்பாடு மற்றும் நெறிப்படுத்தல் வாக் ஒப்பிரான், ஜீனோம் மற்றும் மனித ஜீனோம் திட்டம், டி.என்.ஏ விரல் அச்சு,7.3 பரிணாமம் உயிரின் தோற்றம்
    உயிரிய பரிணாமம் மற்றும் அதற்கான சான்றுகள் (புதை படிமவியல், ஒப்புமை உள்ளுறுப்பியல், கருவியல் மற்றும் மூலக்கூறு சான்று ; டார்வினின் பங்களிப்பு, பரிணாமத்திற்கான அண்மை தொகுப்பு கோட்பாடு ; பரிணாம செயல்முறைகள்- மாறுபாடுகள் (திடீர் மாற்றம் மற்றும் மறுசேர்க்கை) மற்றும் இயற்கை தேர்வு எடுத்துக் காட்டுகளுடன், இயற்கை தேர்வு வகைகள்; ஜின் ஓட்டம் மற்றும்.. ஜீன் நுகர்வு: ஹார்டி-வெயின்பெர்க் தத்துவம்; தழுவி ப்ரவல்; மனித பரிணாமம்
    அலகு 8: உயிரியல் மற்றும் மனித நலம்: 8.1 உடல் நலம் மற்றும் நோய்கள் :
    மனித நோய்களுண்டாக்கும் நோய் கிருமிகள் (மலேரியா, க்பைலேரியா, ஆச்காரியாசிஸ், டைஃபாய்டு, நிமோனியா, ஜலதோஷம், அமீபியாசிஸ், படர்தாமரை); நோய் தடை காப்பியலின் அடிப்படை கொள்கைகள்- தடுப்பூசிகள், புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ்; இளமைப்பருவம், போதை மருந்து மற்றும் மதுவை தவறாக பயன்படுத்தல்.8.2 உணவு உற்பத்தியில் முன்னேற்றம்: தாவரங்களில் கலப்பினப்பெருக்கம், திசு வளர்ப்பு, ஓற்றை செல் புரதம், உயிரி வலுவூட்டல்; தேனீ வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு மனித நலத்தில் நுண்ணுயிரிகளின் பங்கு:வீட்டில் உணவு பதப்படுத்தல், தொழில்துறை உற்பத்தி, கழிவு நீர் சுத்திகரிப்பு, ஆற்றல் உற்பத்தி மற்றும் உயிரிய கட்டுப்பாட்டு காரணி மற்றும் உயிர் உரம்,
    அலகு 9 : உயிர்தொழில் நுட்பவியல் மற்றும் அதன் பயன்பாடுகள்: 9.1 உயிர் தொழில் நுட்பத்தின் தத்துவம் மற்றும் செயல்முறைகள் :
    மரபு பொறியியல் (மறுச்சேர்க்கை டி. என்.ஏ. தொழில்நுட்பம்) உடல் நல பேணல் மற்றும் வேளாண்மையில் உயிர் தொழில் நுட்பவியலின் பயன்பாடு மனித இன்சுலின் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் தயாரித்தல், மரபணு சிகிச்சை; மரபணு மாற்றப்பட்ட உயிரிகள் – Bt-தாவரங்கள், மரபு மாற்ற விலங்குகள்;உயிர் பாதுகாப்பு பிரச்சினைகள்- உயிரிய கொள்ளை மற்றும் காப்புரிமை.
    அலகு 10 : சூழ்நிலையியல் மற்றும் சுற்றுச்சூழல் : 10.1 உயிரிகளும் சுற்றுச்சூழலும்:
    உடல், வாழிடம் மற்றும் சூழ்நிலைக்கூறு; இனத்தொகை மற்றும் சூழ்நிலை தகவமைப்புகள்; இனங்களிடைத் தொடர்புகள் – பரிமாற்ற வாழ்க்கை, கொன்று தின்னும வாழ்க்கை, ஓட்டுண்ணி வாழ்க்கை; இனத்தொகை பண்புக்கூறுகள்- வளர்ச்சி, பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம், வயது பரவல்.10.2சூழ்நிலை மண்டலம்:
    வடிவங்கள், கூறுகள்; உற்பத்தி மற்றும் சிதைவு ஆற்றல் ஓட்டம்; எண்களின் கூம்பு, உயிர் திரன் கூம்பு, ஆற்றல் கூம்பு, ஊட்டத்தின் சுழற்சி (கார்பன் மற்றும் பாஸ்பரஸ்); சூழ்நிலை சேவைகள் – கார்பன் நிலைப்படுத்தல், மகரந்த சேர்க்கை, ஆக்சிஜன் வெளியிடு10.3 உயிரியல் பல்வகைமை மற்றும் பாதுகாத்தல்:
    உடல்.. உயிரியல் பல்வகைமையின் கொள்கை, உயிரியல் பல்வகைமையின் வடிவங்கள், உயிரியல் பல்வகைமையின் முக்கியத்துவம், உயிரியல் பல்வகைமை இழப்பு: உயிரியல் பல்வகைமை பாதுகாப்பு :உயிரின வளமிகுடம் ; அழிவின் விளிம்பில் உள்ள உயிரிகள் இனமழிதல்; சிவப்பு தவரவு புத்தகம், உயிர்கோள காப்பகம், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்.10.4 சுற்றுச்சூழல் பிரச்சினைகள்:
    காற்று மாசுபாடு மற்றும் அதன் கட்டுப்பாடு; நீர் மாசுப்பாடு மற்றும் அதன் கட்டுப்பாடு, விவசாய வேதி பொருட்கள் மற்றும் அதன் விளைவுகள்; திடக்கழிவு மேலாண்மை, அணுகதிர் கழிவு மேலாண்மை; பசுமை இல்ல விளைவு மற்றும் புவி வெப்பமயமாதல்; ஓசோன் படலம் குறைதல் காடழித்தல், சூழ்நிலை பிரச்சனைகளை வெற்றிகரமாக கையாண்ட ஏதேனும் மூன்றுநிகழ்வுகள்.

    நோக்கம் :

    • நீட் தேர்வர்கள் தாவரவியலில் நல்லமதிப்பெண்கள் பெற கவனம் செலுத்த ஊக்குவித்தல்.
    • தாவரவியல் பாடங்களில் வரைபடங்கள் & அதிகமாக கேட்கப்படும் பாட பகுதியில் மாணவர்களுக்கு பயிற்றுவித்தல்
    • தாவரவியல் பாடங்களில் அதிகம் மதிப்பெண் பெற்றால் சித்தா , யுனானி ,& ஆயுர்வேதா போன்ற மருத்துவ துறைகளில் இடம் கிடைப்பத்துடன், அவர்களின் மருத்துவ படிப்பிலும் பயன்படுகிறது.
    • நீட் தேர்வில் ஆர்வமுள்ளவர்களில் பெரும்பாலோர் தாவரவியலைச் சலிப்பாகக் கருதுவதால் மற்ற பாடங்களில் படிப்பதில் நேரத்தைச் செலவிடவிரும்புகின்றனர். ஆனால் தாவரவியலில் குறைவான கருத்துகள் மற்றும் அதிக எடுத்துக்காட்டுகள் இருப்பதால் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது எளிது.
    • மாணவர்கள் தாவரவியல் பாடங்களினால் மேலும் மூலக்கூறு ஆய்வுகளுக்கான வலுவான அடிப்படைகளை உருவாக்க கற்றுக்கொள்வார்கள்
    • தாவரவியல் படிப்பதன் மூலம் மாணவர்கள் பன்முகத்தன்மை, தாவரங்களின் அடையாளம், தாவரங்களின் வகைப்பாடு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் பற்றிய புரிதலை வளர்ப்பார்கள்.
    • தாவரவியல் பாடத்தில் வகைப்பாடு, நுண்ணுயிரிகளின் அமைப்பு,மற்றும் நுண்ணுயிரிகளின் தொற்றுதன்மை சுழற்சி பற்றிய மாணவர்களின் புரிதலை அதிகரிக்கிறது
    • தாவரவியல் படிப்பதன் மூலம் மாணவர்கள் புற அமைப்பியல், உள்ளமைபியல், உடலியல் மற்றும் உயிர்வேதியியல் நிலை ஆகியவற்றில் இனப்பெருக்க உறுப்புகளை வேறுபடுத்த முடியும்.
      இந்த அறிவு கலப்பினங்களை உற்பத்தி செய்வது விவசாயத்தில் பயன்படுத்த உதவும்.
    • தாவரவியல் கற்கும் மாணவர்கள் இதைப் பற்றிய புரிதலைப் பெறுவார்கள்:மறுசீரமைப்பு டிஎன்ஏவின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நவீன யுக தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்
    • சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கும் காரணிகள் & சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கதிற்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்கள் தாவரவியல் படிப்பதன் மூலம் கற்றுக்கொள்வார்கள்.
    Share This Course:

    Related Courses:

    Course Thumb
    Intermediate
    NEET Physics Crash Course
    Crash Course features an online and offline classes to specific fields of study after the 12th exam which would be 30-40 days course.
    Course Thumb
    Intermediate
    JEE Chemistry Crash Course
    Crash Course features an online and offline classes to specific fields of study after the 12th exam which would be 30-40 days course.